குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்கு பிரதமர் மோடி, நாளை முதல் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து இன்று தனி விமானம் மூலம் அவர் டோக்கியோ புறப்பட்டுச் செல்கிறார்.

ஜப்பானில் நடைபெறும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இடம் பெற்றுள்ள குவாட் அமைப்பின் 2வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

தமது டோக்கியோ பயணத்தின் போது, இந்தியா-ஜப்பான் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நான் எதிர் எதிர்நோக்கி உள்ளேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

குவாட் மாநாட்டில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடனான இருதரப்பு சந்திப்பை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.

இந்தோ-பசிபிக் மற்றும் பரஸ்பர நலன் தொடர்பான உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்ள குவாட் மாநாடு வாய்ப்பளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது ஜப்பான் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com