மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மைக் டைசன் : தொந்தரவு செய்த சகபயணிக்கு சரமாரி அடி!!

மைக் டைசன்
மைக் டைசன்

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். வன்முறை நடவடிக்கைகளுக்கு பெயர்போனவர், 1997ம் ஆண்டு ஒருவரது காதை மைக் டைசன் கடித்து துப்பியது உலகம் முழுவதும் பேசப்பட்டது. இப்போது சக பயணி ஒருவரை விமானத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சான்பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றில் மைக் டைசன் பயணம் செய்தார். அப்போது அவருக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் தொடர்ந்து மைக் டைசனை தொந்தரவு செய்வது போல பேசிகொண்டே இருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மைக் டைசன் தன் சீட்டில் இருந்து எழுந்து, பின் இருக்கையில் இருந்த பயணியின் முகத்தில் சராமாரியாக தாக்குகிறார். அதன்பின் முகத்தின் ரத்தத்துடன் பயணி சில முக பாவனைகளை வெளியிடுகிறார்.

இதுகுறித்து சக பயணிகள் கூறுகையில், மைக் டைஸன் அந்த பயணியை அமைதியாக இருக்கும்படி கூறிவந்தார். ஆனால் அந்த பயணியோ அவரை தொந்தரவு செய்யும்படி காதில் கத்தியபடியே இருந்தார். இதனால் டைசன் அவரை தாக்கினார். பின்னர் விமானம் கிளம்புவதற்கு முன் மைக் டைசன் விமானத்தில் இருந்து வெளியேறினார் என கூறியுள்ளனர்.

அவரே அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், மற்றவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com