ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதல்ல

ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதல்ல என்று, கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதல்ல

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கல்வி நிறுவனம் தடை விதித்ததால், மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே, ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, கர்நாடகவில் இஸ்லாமிய மாணவிகளும், இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக தோளில் காவி துண்டு அணிந்து சென்று, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் கர்நாடகாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு, மாணவ மாணவிகள் மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை அணிந்து வர, கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்த வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாள்தோறும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதல்ல என்று, கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com