
நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 80 சதவீதம் பேருக்கு இரு தவணைகளும், 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு நாளை முதல் கொரேனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். மேலும், நாட்டில் உள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்றும் தகுதியான நபர்கள் விரைந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.