கல்வியறிவு, வேலைவாய்ப்பின்மையால் தவிக்கும் பழங்குடியின மக்கள்

கல்வியறிவு, வேலைவாய்ப்பின்மையால் தவிக்கும் பழங்குடியின மக்கள்

பழங்குடியின மக்கள் தங்களது பூர்வீக இடங்களை விட்டு வெளியேறாமல் மலையும் மலை சார்ந்த இடங்களில் தனிமைபடுத்திக்கொண்டுள்ளதால், கல்வியறிவு, வேலைவாய்ப்பின்மை, நவீன அறிவியல் வளர்ச்சி போன்றவை தடைபடுகிறது என பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கவலை தெரிவித்தார்.

சென்னை அடையாறில் உள்ள அரசு இளைஞர் விடுதியில் மத்திய அரசு உள்துறை அமைச்சகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் 13வது தேசிய பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசான் மௌலானா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இதில் ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின இளையோர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஒரு நாட்டின் நிர்ணய சக்தியாக இருக்கும் மாணவர்களை ஆக்க சக்தியாகவும், அழிக்கும் சக்தியாகவும் மாற்ற முடியும், ஆனால் மாணவர்களை ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் அதேவேலையில், வளர்ச்சியின் தூதுவர்களாக அவர்களை நெறிபடுத்தும் கடமை நமக்கு உண்டு. நாடு சசுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பும், இது போன்ற பரிமாற்றம் நிகழ்வு நடப்பது கவலையளிக்கிறது என்றார்.

பழங்கியின மக்கள் தங்களது பூர்வீக இடங்களை விட்டு வெளியேறாமல் மலையும் மலை சார்ந்த இடங்களில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு, நவீன அறிவியல் வளர்ச்சி தடை படுகிறது. ஏழ்மை, வேலைவாய்ப்மின்மை, கல்வியறிவின்மை போன்றவை பெரும் சவால்களாக உள்ளது. எனவே, இளைஞர்கள் நேற்மறை சிந்தனையுடன் கூடிய கல்வியறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பெரும் பொருப்பு உள்ளது. இதற்கு இது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கும் பயனளிக்கும். தமிழகத்தில் பழங்குடியின மக்கள் 1.01% பேர் உள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, சதிஷ்கர் போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்கள் கல்வியறிவில் முன்னேறியுள்ளனர். மக்களுக்கான வளர்ச்சியை உள்ளடக்கிய முதல்வராக முக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com