Jeyakumar
Jeyakumar

திமுக தேநீர் விருந்தில் பங்கேற்காதது ஏன்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!!

ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காதது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் வேதனையளிப்பதாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Published on

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஆளுநர் தந்த தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காதது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் வேதனையளிப்பதாக உள்ளது. தமிழைக் காக்க வேண்டும் என்று கூறும் திமுக, தேநீர் விருந்தில் பங்கேற்காதது ஏன்?

தமிழையும், தமிழர்களையும் போற்றும் வகையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக கலந்துக்கொண்டது. 17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? திமுக அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது என்று தெரிவித்தார்.

logo
vnews27
www.vnews27.com