பள்ளிக் கல்வியில் இந்தியாவில் முன்மாதிரி மாநிலம் தமிழகம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவது தான் தமிழக அரசின் நோக்கம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, நம் பள்ளி நம் பெருமை எனும் விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஸ்மார்ட் வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து,

லேடி வெலிங்டன் பள்ளியின், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட லதா என்பவருக்கு சான்றிதழை வழங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான உறுதிமொழியை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வாசிக்க, உறுப்பினர்கள் பின்தொடர்ந்து கூறி உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிப் பருவம் என்பது திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம், இங்கிருக்கும் மாணவர்களை ஏக்கத்துடன் வாழ்த்துகிறேன். நான் ஏக்கத்துடன் வாழ்த்துவதாக கூற காரணம், இந்த பருவத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி, கொண்டாட்டம் வேறு எந்த பருவத்திலும் கிடைக்காது.

இந்த பருவத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். இப்பள்ளி சுப்புலட்சுமி அம்மையாரால் சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்டு 1914ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளியாக இருந்தது.

பின்பு 1921 கட்டடம் கட்டப்பட்டு லேடி வெலிங்டன் உயர்நிலைப் பள்ளியாக பெயர் மாற்றப்பட்டது. 1922 டிசம்பர் 19ல் இப்பள்ளி தொடங்கியது. ஒருமைக்கண் தான் கற்ற கல்வி என்ற குறளை நினைவூட்டுகிறேன். திருட முடியாத ஒரே சொத்து கல்விதான். அதனால் தான் தமிழக அரசு பள்ளிக் கல்விக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்கள் வழியாக வாழ்கிறார்கள், வருகிறார்கள். ஆனால் உங்களிலிருந்து வரவில்லை, அவர்களுக்கு நீங்கள் அன்பை தரலாம், சிந்தனையை அல்ல, அவர்களை உங்களைப் போல் ஆக்க நினைக்காதீர்கள் என்ற கலீல் ஜிப்ரான் வரிகளை நினைவூட்டுகிறேன்.

இந்த நிதி நிலை அறிக்கையில் 36,892 கோடி பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டது. அரசுப் பள்ளிகள் அனைத்தும் தன்னிறைவு பெற வேண்டும், தரமான, சமாமன கல்வி குழந்தைகளுக்கு கிடக்க வேண்டும் என்பதால் தான் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவது தான் தமிழக அரசின் நோக்கம். அனைத்து வகை வன்முறைகளில் இருந்தும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அனைத்து குழந்தைகளும் பிற குழந்தைகளுடன் அன்பு பாராட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com