தமிழக அரசு வரியை குறைக்கவில்லை என பிரதமர் கூறியதற்கு சட்டப்பேரவையில் முதல்வர் பதில் அளித்தார்.பெட்ரோல், டீசல் வரியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை என்ற பிரதமரின் புகாருக்கு முதல்வர் விளக்கம் அளித்தார். பெட்ரோல் விலையை குறைப்பது போல நடித்து மற்றவர் மீது பழியை போடுவது யார் என மக்களுக்கு தெரியும் என கூறினார்.
2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை ஒன்றிய அரசு என குற்றம் சாட்டினார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மக்களை கஷ்டப்படுத்துகிறது ஒன்றிய அரசு என பேசினார்.
பெட்ரோல் விலையை குறைத்தது யார்? ஏற்றியது யார்? என்பதை மக்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன் என தெரிவித்தார். சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது என்பதற்காக விலையை உயர்த்தாமல் இருந்தது யார்? எனவும் கேள்வி எழுப்பினார். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும் எனவும் கூறினார்.
கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது ஒன்றிய அரசு கடுமையாக வரி உயர்த்தியது எனவும் கூறினார். ஒன்றிய அரசுக்கு முன்பே பெட்ரோல் மீதான விலையை குறைத்தது தமிழக அரசு என தெரிவித்தார்.