யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்வி மட்டும்தான்… பள்ளி திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் அறிவுரை!!

D.A.V குழுமத்தின் புதிய பள்ளியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். சென்னை பள்ளிக்கரணையில் D.A.V குழுமத்தின் புதிய பள்ளியின் திறப்பு விழா நடைபெற்றது
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

. ஆர்ய சமாஜ் கல்விச் சங்கம் மூலம் நிர்வகிக்கப்படும் இப்பள்ளி 3 ஏக்கர் பரப்பில் 5ஆயிரம் மாணவர்கள் பயிலும் வகையில் அமைந்துள்ளது. இந்த பள்ளியின் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பள்ளியை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், சென்னையில் அரை நூற்றாண்டாக D.A.V பள்ளி கல்வி சேவையாற்றி வருகிறது.

கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரி விழாக்களில் வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பு பெற்றுள்ளதால் , நான் புத்துணர்வாக உணர்கிறேன். நான் பிறந்து வளர்ந்த கோபாலபுரத்தில் இதன் முதல் பள்ளி தொடங்கப்பட்டது. 1989 ல் இதன் 3வது பள்ளியை கருணாநிதி திறந்து வைத்தார். இங்கு சீட் வாங்குவது சிரமம், எனக்கு அனுபவம் இருக்கிறது.

என் மகள் செந்தாமரை கோபாலபுரம் DAV பள்ளியில்தான் படித்தார். எனது தம்பி மகள் பூங்குழலிக்கு இந்த குழும பள்ளியில் சீட் கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை. இத்தனைக்கும் அப்போது ஆட்சியில் திமுகதான் இருந்தது. அந்தளவு ஸ்டிரிக்டாக இருக்கும் பள்ளி இது. அதன்பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு சீட் வாங்கிவிட்டோம். அனைத்து வகை பள்ளிகளும் கல்விக் கண் திறக்கும் சாலைகளாக இருக்கின்றன.

யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்விதான், அதை உருவாக்கும் கருவூலம்தான் பள்ளிக்கூடங்கள். இரு அரசுப் பள்ளிக்கு இந்த குழுமம் உதவி வருகிறது. இல்லம் தேடி கல்வி மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு , 2 ஆண்டில் விடுபட்ட பாடங்கள் நடத்தப்பட்டன.

. மாணவர்கள் தயானந்தா சாமிகள் போல உண்மை , நேர்மையை கடைபிடிக்க வேண்டும். போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் தனித்திறமை, அறிவாற்றல், நேர்மை, உண்மை இருந்தால்தான் வளர முடியும். தாய் மொழிக் கல்விக்கு ஊக்கமளிக்கும் விதமாக அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்பட வேண்டும், பள்ளிகள் தங்களது திட்டங்களுக்கு அழகான தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும். தாய் மொழி மற்றும் தாய் நாட்டுப் பற்று அனைவருக்கும் முக்கியம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com