ஹஜ் பயணம் விவகாரம்… மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு மத்திய அரசு பதில்!!

ஹஜ் பயணம் சென்னை விமான நிலையத்திலிருந்து தொடங்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்த்தர் அபாஸ் நாக்வி
மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்த்தர் அபாஸ் நாக்வி

முதலமைச்சரின் கடிதத்திற்கு இந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்த்தர் அபாஸ் நாக்வி, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்ட சிறப்பு அனுமதிக்கு பிறகு பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு வழிகாட்டி நெறிமுறைகள் போன்றவையை பின்பற்றி ஹஜ் பயணம் மேற்கொள்ள முனையங்களை இந்திய ஹஜ் ஆணையம் தேர்வு செய்கிறது.

அதன் படி கொரோனா பரவல் காரணமாக அடுத்த ஆண்டு ஹஜ் 2023 ஆம் ஆண்டு முதல் சென்னை விமான நிலையத்திலுருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க ஆலோசிக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com