காங்கிரஸ் கட்சியின் sc பிரிவு சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துறைகளின் ஒருங்கிணைப்பாளருமான ராஜு தொகுத்துள்ள தலித் உண்மைகள் ((The dalit truth - the battles for realising ambedkar's vision )) எனும் புத்தகத்தின் அறிமுக விழாவில் பங்கேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் விழா மேடையில் பேசிய அவர், புத்தகம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பிரதியை எனக்கு முன்னரே கொடுத்தனர், புத்தக தலைப்பே அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான அரசியலமைப்பு சட்டம் எழுதளவு செயல்பாட்டில் உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து…