விரைவில் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலின் இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள பயணத்திட்டம் தயாராகவுள்ளது
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்

முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக்வின் சொந்த நாடான இங்கிலாந்தில் அவரின் ஊரில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அவரின் சிலையை திறப்பதற்கு இலண்டனுக்கு வருவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் அமெரிக்க நாட்டில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் கலந்துகொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா வரும்போது தமிழகத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கிற 50க்கும் மேலான தமிழ் தொழிலதிபர்களை இணைத்து அவர்களை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாக இலண்டனில் மே 5 முதல் 7 வரை நடைபெற்ற தி - ரைஸ் - எழுமின் மாநாட்டில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலண்டன், அமெரிக்காவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான பயணத்திட்டம் விரைவில் இறுதியாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com