மே.1 முதல் அமலாகிறது தானியங்கி ஒற்றைச் சாளர அனுமதி முறை... தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

மே.1 ஆம் தேதி முதல் தானியங்கி ஒற்றைச்சாளர அனுமதி முறை அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Tamil Nadu government
Tamil Nadu government

அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரக இயக்ககம் மூலம் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

கட்டிடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டியிருப்பதால் காலதாமதம் ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு அலைச்சல் அதிகளவில் இருப்பதாக புகார் எழுந்தது. அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றைச்சாளர முறையில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி ஒற்றைச்சாளர முறையில் அதுவும் தானியங்கி முறையிலே கட்டிட அனுமதியை பெறும் முறை மே.1 ஆம் தேதி முதல் அமலாகிறது.

முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், அடுத்தகட்டமாக பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் ஒற்றைச்சாளர திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது

மே.1 ஆம் தேதி முதல் கட்டிடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தால் போதுமானது. நேரில் வர தேவையில்லை. உரிய ஆவணங்கள் பதிவு செய்திருந்தால் தானியங்கி முறையிலே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com