சொத்துவரி, தொழில் வரி செலுத்த இன்றே கடைசி நாள்

சொத்துவரி, தொழில் வரி செலுத்த இன்றே கடைசி நாள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியினை செலுத்த இன்றே கடைசி எனவும் தவறினால் வட்டி விதிக்கப்படுமெனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், இணையதளம், செல்போன் செயலி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் மற்றும் உரிமம் ஆய்வாளர்கள் வாயிலாக செலுத்த வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 451 பேர் சொத்து வரியும், 80 ஆயிரத்து 496 பேர் தொழில் வரியும் செலுத்தியுள்ளனர்.

மூலமாக சொத்துவரி அல்லது தொழில் வரி செலுத்தும்போது, ஏதேனும் குறைபாடுகள், சிக்கல்கள் ஏற்பட்டால், வரி செலுத்துவோர் பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘1913’ என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியினை செலுத்த இன்றே கடைசியாகும். தவறினால் வட்டி விதிக்கப்படுமெனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com