
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் அரசு வழங்கிய பரோல் காரணமாக தற்போது வெளியில் உள்ளார். இந்தநிலையில், பேரறிவாளன் உச்ச நீதிமன்றம் முதன்முறையாக ஜாமீன் வழங்கி கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது. பின்னர் சில சிறை நடைமுறைகளை முடித்துக் கொண்டு முறைப்படி அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், நீதிக்கான 31 ஆண்டு கால போராட்டத்தில் மிகவும் முக்கியமான காலகட்டம் என்றார். ஆனால், ஜாமீன் என்பது இடைக்கால நிவாரணம்தான் என்றும் முழுமை விடுதலைக்கான காலம் இன்னும் கைகூடவில்லை என்றும் கவலை தெரிவித்தார். தொடர் ஆதரவு அளித்து வரும் அரசியல் கட்சித் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், திரைத்துறையினர், ஊடகத்தினர் மற்றும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளி வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பேரறிவாளனும் குறிப்பிட்டார்.