
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தாமதமாவதை தொடர்ந்து தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும் அதனால் பேரறிவாளனுக்கு ஜாமின் தரக்கூடாது என்றும் வாதிட்டார். பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 3 முறை பரோலில் வந்துள்ள பேறிவாளன், அப்போது நல்ல முறையில் நடந்துகொண்டுள்ளார் என்றும் அனைத்தையும் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், சிறை சிறை விடுப்பின் போதும், சிறையிலும் பேரறிவாளன் நடத்தை மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் பதிவாகவில்லை குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால் இனி கால தாமதம் செய்வதை ஏற்க முடியாது என்று தெரிவித்து பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.