இறுதி கட்டமாக இன்று தொடங்கியது இடமாறுதல் கலந்தாய்வு.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
இறுதி கட்டமாக இன்று தொடங்கியது இடமாறுதல் கலந்தாய்வு.

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது.

முதற்கட்டமாக, 'எமிஸ்' என்ற பள்ளி கல்வி மேலாண்மை தளத்தை பயன்படுத்தி, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த தளத்தில் ஆசிரியர்களின் தகவல்களை பதிவு செய்வது மற்றும் அவற்றை பார்ப்பதில், ஏராளமான தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டன.

இதனால் தனியே நாள்தோறும் காலியிடங்களை பதிவு செய்து, அதன்படி, இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது இறுதி கட்ட கலந்தாய்வு இன்று நடைபெருகிறது. இதில், 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. மூன்று நாட்களில் இந்த கலந்தாய்வு முடிய வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வித்துறை  அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com