பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட அடிக்கல் நாட்டினார்

கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட அடிக்கலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட அடிக்கல் நாட்டினார்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட அடிக்கல்லை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துமனை இருக்கும் நிலையில் தென்சென்னையில் 250 கோடி மதிப்பீட்டில் 4.89 எக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக கட்டப்படவுள்ளது. மேலும், 200 கோடி ரூபாயில் கட்டுமான பணிகள் மற்றும் மீதமுள்ள 50கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளனர்.

மேலும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு இணையாக அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக இந்த பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com