ஜனநாயகத்திற்கு நேற்று ஒரு கருப்பு நாள்... பேரறிவாளன் விடுதலை குறித்து பொன்.கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு கருத்து!!

பேரறிவாளனை மீண்டும் கைது செய்து உள்ளே தள்ளும் வரை போராடுவோம் என காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு நேற்று ஒரு கருப்பு நாள்... பேரறிவாளன் விடுதலை குறித்து பொன்.கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு கருத்து!!

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமையில் வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, நேற்று மாநில தலைவர் கே.எஸ் அழகிரி விடுத்த அறிக்கையின் அடிப்படையில் இன்று இந்த அறப்போராட்டம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை விமர்சிக்கா விட்டாலும் அதன் மீது கருத்து சொல்ல இந்திய குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு.

நேற்று விடுதலை செய்யப்பட்டவர் தியாகி அல்ல அவர் ஒரு பயங்கரவாதி. கொலைக் குற்றவாளிகளை தமிழர்கள் என்று அடையாளம் காட்டி அவர்களை விடுதலை செய்வது அபத்தமான ஒன்று. இந்த பயங்கரவாதியை கொஞ்சுவதும் கட்டிப் பிடிப்பதும் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் கொந்தளித்து உள்ளோம். ஜனநாயகத்திற்கு நேற்று ஒரு கருப்பு நாள். மக்கள் யாரும் இந்தப் விடுதலையை கொண்டாடப்படவில்லை. இதை ஆதரிக்கும் கழகத்திடம் கேட்கிறேன் உங்கள் குடும்பத்தில் உங்கள் கழகத்தில் யாராவது இறந்தால் இப்படி கொண்டாடுவீர்களா. பேரறிவாளனை மீண்டும் கைது செய்து உள்ளே தள்ளும் வரை போராடுவோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com