ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்… இராமநாதபுரத்தில் பரபரப்பு!!

கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்து இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்… இராமநாதபுரத்தில் பரபரப்பு!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ்.மங்கலம் தாலுகா, கருப்பகுடும்பன்பச்சேரி கிராமத்தை சேர்ந்த சௌந்தரராஜன் மனைவி வளர்மதி. இவர் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார். கட்டிட தொழிலாளி, திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கருப்பகுடும்பன்பச்சேரி கிராமத்தில் வேற்று மதத்தினர் அதிக அளவில் வசிக்கின்ற நிலையில் வளர்மதி குடும்பத்தினரையும் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வளர்மதி சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த போது சரக்கு லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளனர். இது குறித்து ஆர்எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

. கடந்த சில தினங்களுக்கு முன் தேவிபட்டிணம் இசிஆர் சாலையில் வளர்மதி மகன் சதிஷ்குமார் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நடக்க முடியாத நிலையில் உள்ளார்.

இந்நிலையில் வளர்மதி இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தீப்பட்டி எடுத்து பற்ற வைத்துக் கொள்ளும் நிலையில் அருகிலிருந்தவர்கள் அதனைப் பறித்து தடுத்தனர். தீயணைப்பு துறையினர் கம்பளியை போட்டு மூடி, தண்ணீரை ஊற்றி தீப்பற்ற விடாமல் தடுத்து காப்பாற்றினார்.

இதுகுறித்து வளர்மதி கூறுகையில், கிராமத்தில் எங்கள் குடும்பம் மட்டுமே இந்து குடும்பமாக உள்ளது. எங்களை மதம் மாறச் சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். மதம் மாற மறுத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை ஓரம் நடந்து கொண்டிருந்த என்னை சரக்கு வாகனத்தில் ஏற்றி கொலை செய்ய முயன்றனர்.

மயிரிழையில் உயிர் தப்பிய நான் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ஆர்எஸ்.மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். மறுநாள் எனது மகன் தேவிபட்டினம் ஈசிஆர் ரோட்டில் வந்துகொண்டிருந்தபோது 8 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பியால் தாக்கினர்.

அருகிலிருந்தவர்கள் பலத்த காயங்களுடன் இருந்த எனது மகனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் தற்போது நடக்க முடியாத நிலையில் வீட்டில் உள்ளார். இது குறித்து அடையாளம் தெரிந்தவர் 6 பேர் மீது கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். காவல்துறை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை

எனது மகன் வருமானத்தை நம்பியே எங்கள் குடும்பம் உள்ளது. மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி வரும் நபர்கள் எங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டி வரும் நிலையில் அவர்கள் கையால் இறப்பதை விட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள மண்ணெண்ணெய் கேனுடன் தந்தோம் காவல்துறையினர் பறித்து விட்டனர் உரிய நியாயம் கிடைக்கும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com