இடியாப்பம் தரலையா...? அப்போ அவன் மேல வழக்கு போடு...

போலிஸ் கேட்டு ஓசி இடியாப்பம் தராததால் இரண்டு பட்டதாரி இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த சிட்லபாக்கம் காவல் ஆய்வாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடியாப்பம் தரலையா...? அப்போ அவன் மேல வழக்கு போடு...

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வசித்து வரும் பட்டாதாரி இளைஞரான சிலம்பரசன் என்பவர் குரோம்பேட்டை ராதாநகர் பிரதான சாலையில் காவல் நிலைய சோதனை சாவடி அருகில் கடந்த ஒருவருட காலமாக இடியாப்பம் புட்டு கடை நடத்தி வருகிறார்.

சிட்லபாக்கம் S12 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு இருப்பதால். அடிக்கடி இக்கடைக்கி காவல்நிலைய காவலர் சுரேஷ் குமார் என்பவர் வந்து ஓசியில் இடியாப்பம் புட்டு கேட்பார். கடையில் பணி புரிகின்றவர்கள் பயந்து சுரேஷ்குமாருக்கு இடியாப்பம் புட்டு கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.

.இரு தினங்களுக்கு முன்பு காவலர் சுரேஷ்குமார் வந்து இடியாப்பம் புட்டு கேட்டுள்ளார் கடையில் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்ததால் இடியாப்பம் கொடுப்பதற்கு தாமதமாகிவிட்டது என்ற காரணத்தால் ஆத்திரமடைந்த காவலர் சுரேஷ்குமார் சிறிது நேரம் கழித்து வந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சிலம்பரசனையும் அவரது தம்பி விக்னேஷ்யையும் ஆபாச வார்த்தைகளில் திட்டி காட்டுமிராண்டித்தனமாக தாக்கி எங்கிருந்தோ பிழைக்க வந்த நாய்ங்க புட்டு கேட்டா தர மாட்டீங்களா இனிமேல் எனக்கு மாதம் மாதம் பணம் கொடுக்க வேண்டும் என்று அவர்களை மிரட்டி உள்ளார்.

எதற்கு சார் நாங்கள் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சிலம்பரசன் கேட்டதற்கு அவரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்பு சிலம்பரசனையும் அவரது சகோதரர் விக்னேஷ்யையும் காவல் நிலையத்திற்கு போலிஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பின்பு காவல்நிலையத்தில் வைத்து இருவரையும் தாக்கி ஆய்வாளர் மகுடீஸ்வரியிடம் ஒப்படைத்து பொய் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்து உள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்ற மனித உரிமை அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் S12 சிட்லபாக்கம் காவல்நிலைய காவலர் சுரேஷ் குமாரின் மீது மனித உரிமை ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் வாடிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com