சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் கே.கோவிந்தராஜன் திலகவதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே முதல் வாரம் மட்டும் திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமை மனுத்தாக்கல் செய்யலாம் என்றும், அவை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும், அவை புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக 21 நீதிபதிகளை சுழற்சி நீதிபதிகள் வீதம் 20 விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 15 நீதிபதிகள், விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.