என்ன இத்தனை கோடிக்கு விற்பனையா? வாயை பிளக்கும் மக்கள்...

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 252.34 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
என்ன இத்தனை கோடிக்கு விற்பனையா? 
வாயை பிளக்கும் மக்கள்...

உழைப்பாளர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதால், டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், மதுப்பிரியர்கள் நேற்றைய தினமே அதிகளவில் மதுபானங்கள் வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர்.

அதன் படி, நேற்று ஒரே நாளில் 252.34கோடி க்கு மதுபானங்கள் விற்பனை நடைப்பெற்றிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.54.89 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.52.28 கோடிக்கு நேற்று மது விற்பனை நடந்துள்ளது.

அதேபோல் திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.46.72, சேலம் மண்டலத்தில் ரூ.48.67 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com