தடுப்பூசி மையங்களில் முழு வீச்சில் செயல்பட வேண்டும்… மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தல்!!

அரசு மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் இயக்குனர் நாராயணபாபு அறிவித்துள்ளார்.
தடுப்பூசி மையங்களில் முழு வீச்சில் செயல்பட வேண்டும்… மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தல்!!

கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மருத்துவமனை இயக்குனர் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் இயக்குனர் நாராயணபாபு கடிதம் எழுதியுள்ளார். அதில், மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

மருத்துவ மாணவர்கள் தங்கி உள்ள விடுதிகளில் கோரணா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் வரும் நோயாளிகள் மற்றும் நோயாளி கண்காணிப்பாளர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள், தேவையான அளவில் மருந்து, முகக் கவசம், கொரொனாவிற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் முழு வீச்சில் செயல்பட வேண்டும். மருத்துவ மாணவர்கள் இளநிலை, முதல்நிலை நர்சது தமிழர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும். Test- track- treat ,vaccination இதனை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com