சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ இவர்ட் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
இந்த முகாமில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவிகளுக்கு போர்போவேக்ஸ் முதல் தவணை தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறது. மேலும் மாணவிகளுக்கு தேவையான சத்து மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன.
இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சென்னை முழுவதும் 80 சதவீதத்திற்கும் மேற்ப்பட்ட மாநகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முதல் தவனை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. 2வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பொது இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.