அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பத்தாம் வகுப்பு மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது.
பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும். பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.