மின்சாரம் தாக்கு உயிரிழந்த இளைஞர்… திருவிழாவில் நேர்ந்த சோகம்!!

தேனி வீரபாண்டி திருவிழாவில் ராட்டினத்திற்கு மின்சார இணைப்பு கொடுக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி முத்துக்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கு உயிரிழந்த இளைஞர்… திருவிழாவில் நேர்ந்த சோகம்!!

தேனி மாவட்டம் வீரபாண்டியில் கௌமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருவிழாவில் இரவு பகலாக ராட்சச ராட்டினங்கள் பொருத்தப்பட்டு திருவிழா வழக்கம் போல் செயல்பட்டு வந்த நிலையில் இன்று ராட்சத ராட்டினம் திற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக முத்துக்குமார் என்ற வாலிபர் ஈடுபட்டுள்ளார்.

ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்ட பகுதியில் தற்காலிக மின்சார கோபுரங்களில் மின் இணைப்புகளை சரி செய்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டு மின்சாரம் அவரை தாக்கியதில் தூக்கி எறியப்பட்ட முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்துக்குமாரன் உடல் முறையாகப் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர்கள் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com