பெட்ரோல் விலை குறைவால் தக்காளி விலை குறையும்

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தக்காளியின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல் விலை குறைவால் தக்காளி விலை குறையும்

குறிப்பாக கடந்த மாதம் ரூபாய் 30 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி அல்லது படிப்படியாக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு காய்கறி அங்காடிகளில் ஒரு நாளைக்கான தக்காளியின் தேவை 1600 டன் ஆக இருக்கக் கூடிய நிலையில் இன்று வெறும் 500 டன் தக்காளி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கோயம்பேடு அங்காடியில் ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் 100 ரூபாய்க்கு சில்லரை விற்பனையில் 120 லிருந்து 150 ரூபாய் வரை விற்கப்படுவதால் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வட மாநிலங்களில் நிலவக்கூடிய கோடை மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளியின் ஏற்றுமதியும் குறைந்து இருக்கிறது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை கணிசமாக குறைப்பதற்கான வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் மத்திய அரசு தற்போது மேற்கொண்டுள்ள பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணமாகவும் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

தக்காளியின் இந்த அதிரடியான விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு சார்பில் பசுமை பண்ணை அங்காடிகளில் குறைந்த விலையில் அதாவது 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஆனால் இந்த திட்டமானது நகரின் அனைத்துப் பகுதிகளிலும் சென்று அடைவதில்லை என்று வியாபாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் தமிழக அரசு கோயம்பேடு அங்காடி காய்கறி அங்காடியில் பசுமை பண்ணை அங்காடியின் மூலம் தக்காளி விற்பனையை மேற்கொண்டால் அது வியாபாரிகளுக்கும் நடுத்தர சாமானிய மக்களுக்கும் சென்றடையக் கூடிய நல்ல திட்டமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com