மறைந்த சித்ராவின் கணவருக்கு கொலை மிரட்டலா? பாதுகாப்பு கேட்டு ஆணையர் அலுவலகத்தில் புகார்..

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு மறைந்த சின்னத்திரை நடிகை VJ சித்ராவின் கணவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மறைந்த சித்ராவின் கணவருக்கு கொலை மிரட்டலா? பாதுகாப்பு கேட்டு ஆணையர் அலுவலகத்தில் புகார்..

சின்னத்திரையில் வெளியான பிரபல நாடகங்களில் நடித்து வந்தவர் சித்ரா காமராஜ் (எ) VJ சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவரான ஹேமந்த் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு பின்னர் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜாமினில் விடுவிக்கபட்டார். இந்நிலையில் மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்த் கடந்த 25 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில் தனது மனைவியான சித்ராவும், தானும் மிகுந்த அன்னியோன்யத்துடன் இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது சின்னத்திரை பிரபலங்கள் அனைவருக்கும் தெரியும் என்பதை குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தனது மனைவி தற்கொலை செய்துகொண்டபோதே தானும் தனது வாழ்வை முடித்துக்கொள்ள எண்ணியதாகவும், ஆனால் தனது மனைவியை தான்தான் தற்கொலைல்கு தூண்டியதாக தன் மீது சேற்றை வாரி இரைத்தவர்கள் முன் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கவே தான் இன்னும் உயிரோடு இருப்பதாகவும் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மனைவியின் தற்கொலைக்குப் பின்னால் பண பலமும், அரசியல் பலமும் கொண்ட மாஃபியா கும்பல் இருப்பதும் பலருக்கு தெரிந்த உண்மை எனினும், அவர்களுக்கு பயந்து அதை வெளியில் கூற அனைவரும் தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி தன்னை மிரட்டி வரும் நிலையில் தனது உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும்வரை தான் உயிரோடு வாழ விரும்புவதால் உயிருக்கு பயந்து தன் வீட்டிலிருந்து வெளியேறி வேறொரு இடத்தில் தான் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க தனக்கு உரிய பாதுகாப்போ அல்லது சொந்த செலவில் போலீஸ் பாதுகாப்போ வழங்கி தனது உயிரை காப்பாற்றுமாறு புகாரின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் முன் தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், தனது மனைவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தவர்கள் என இறப்புக்கு முன் தனது மனைவி கூறிய பெயர்களையும், அவர்களின் விவரங்ககையும் தனது நம்பிக்கைக்கு உரிய சிலர் வெளிக்கொண்டு வருவார்கள் என்பதையும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com