பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி தினகரனை சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், அற்புதம்மாள் என்ற அற்புத தாயின் வைராக்கியத்திற்கு உச்சநீதிமன்றம் அருமையான தீர்ப்பு வழங்கியுள்ளது.
19 வயதில் சிறைக்கு சென்றவருக்கு தற்போது 50 வயது ஆகிறது என சொல்கிறார்.
வரும் காலத்தில் அவருக்கு நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என இறைவனை வேண்டி கொள்வதாக தெரிவித்தார். இதேபோல்
மற்ற 6 தமிழர்களும் விடுதலை ஆக வேண்டும் என்பதே எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த யார் வேண்டுமாலும் அவர்களின் வெற்றியாக கொண்டாடட்டும் இது அற்புதம்மாள் வெற்றி என்றார். மேலும் காங்கிரஸ் கட்சி அவர்களின் தலைவரை இழந்து இருப்பதால் போராட்டம் நடத்துகின்றனர்.
எல்லா விஷயத்திலும் எதிர்மறையான விமர்சனம் இருப்பது போல் பேரறிவாளன் விடுதலையிலும் உள்ளது. அதை பெரிதுபடுத்த தேவையில்லை என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.