ஒன்றிய அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது... துரை வைகோ குற்றச்சாட்டு!!

Vaiko
Vaiko

ஆளுநர்கள் பாஜகவின் ஆளுநர்கள் போல் செயல்படாமல் மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறைக்கு வந்த திமுக அமைப்புச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,தமிழகஅரசு ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில் கொரோனாவைரஸ் பரவல் இரண்டாவது அலை உச்சத்தில்இருந்தது.மேலும் புயல்வெள்ளம் எனஇயற்கை பேரிடர்காலமாகவும் இருந்தது. இந்தசூழலில் கரோனாவைரஸ் பரவலை திறம்பட கட்டுப்படுத்தி இந்தியாவிலேயே கொரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்திய முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது.

மழை புயல் சேதங்களுக்கு நிவாரணமாக தமிழக அரசு 7000 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் கோரியது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு மத்திய குழு வரும் அந்த குழு பார்வையிட்ட பின் பரிந்துரைகளுக்கு ஏற்ப நிவாரணம் கிடைக்கும் என பாஜக தெரிவித்தது. ஆனால் இந்த குழு ஆய்வு செய்து சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன.

இதுவரை ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கவில்லை. உச்சநீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கொடுத்த தீர்ப்பு மாநில ஆளுநர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு சவுக்கடி கொடுத்த தீர்ப்பாகும்.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருவதால் அவருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். ஆளுநர்கள் பாஜகவின் ஆளுநர்கள் போல் செயல்படாமல் தமிழக ஆளுநர்கள் போல் தமிழக மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com