சென்னை ஆயிரம் விளக்கு பகுதிக்கு உட்பட்ட அண்ணா சாலை கிழக்கு பகுதியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பரபரப்பான அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் பைக் பார்க்கிங் அருகே உள்ள புதர் போன்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மரக்கிளையில் சடலமாக தூக்கில் தொங்கிக் கொண்டு கிடந்துள்ளார்.
. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து ஆயிரம் விளக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தற்கொலையா அல்லது யாரேனும் வாலிபரை அடித்து தொங்க விட்டுள்ளனரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பான பகுதியில் அடையாளம் தெரியாத வாலிபர் தொங்கிய நிலையில் சடலமாக கிடக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.