குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்வி… தெளிவுப்படுத்திய பள்ளிக்கல்வித்துறை!

பொதுத்தேர்வில் முன்னுரிமை பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிகல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் மே மாதம் 5 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் அதாவது முன்னுரிமை பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. இதை அடுத்து மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக முழு பாடங்களையும் குறைந்த கால இடைவெளியில் நடத்த முடியாது என்பதால் சுமார் 40 சதவீதம் அளவிற்கு பாடங்கள் குறைக்கப்பட்டது. மீதம் இருக்கக்கூடிய 60 சதவீத பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்டு அவற்றிலிருந்து திருப்புதல் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அடுத்த மாதம் முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் எவ்வளவு பாடத்தை படிக்க வேண்டுமென சில மாணவர்களுக்கு சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை குறைக்கப்பட்ட பாடதிட்டம் அதாவது முன்னிலை படுத்தப்பட்ட பாடம் (Priority syllabus) அதிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.

அந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை முழுமையாக படிக்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு பாடத்திட்டம் என்பதையும் பள்ளிக்கல்வித்துறையின் WWW.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com