ஜூன் 3ல் மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த பகுதிக்கு, அவரின் பெயர் சூட்டும் விழா... அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்!!

பட்டபடிப்பு படிக்கும் பெண்களுக்கு மாதம் 1000 ஆயிரம் என்பது உலகத்தில் எந்த அரசும் செய்யாத காரியம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

சென்னை விருகம்பாக்கம், சாதிக் பாட்ஷா நகரில், ரம்ஜான் நாளை முன்னிட்டு இனிய புனித ரமலான் திருநாள் விழா என்ற பெயரில் 1,500 இஸ்லாமிய நபர்களுக்கு 2 கிலோ அரிசி உட்பட்ட 10 பொருட்கள் அடங்கிய மளிகை பை தொகுப்பு வழங்கப்பட்டது.

விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தலைமையில் நடத்தபட்ட இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் பேசிய அவர், திமுக அரசு இஸ்லாமியரின் பாதுகாவலராக இருந்து வருகிறது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேபடுத்த கடந்த பட்ஜெட்டில் பெண்கள் பட்டபடிப்பில் படித்தால் மாதம் 1000 ஆயிரம் என அறிவிக்கப்பட்டது. உலகத்திலேயே எந்த அரசாங்கமும் செய்யாத காரியம் இது. பெண்கள் படிக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அப்போதே 8 வகுப்பு வரை பள்ளிக்கு செல்லும் பெண்களுக்கு நிதி உதவி அறிவித்தார்.

ஆனால் அதை அடுத்த அதிமுக ஆட்சியில் நிறுத்தினர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போதும் 10 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவிகளுக்கு மீண்டும் நிதி உதவி அறிவித்தார் கலைஞர். அதேபோல தற்போது தந்தை 1 ஆடி பாய்ந்தால் குட்டி 15 அடி பாயும் என்பார்கள் அப்படித்தான் முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுகிறார்.

vivek
vivek

மேலும் ஜூன் 3 ஆம் தேதி மறைந்த நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் என்ற அழைக்கப்படுகின்ற விவேக் பெயரை அவர் வாழ்ந்த பகுதிக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

பின்னர் விழாவின் இறுதியாக விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தனது ஒரு மாத சம்பளத்தை, கை இழந்த சந்துரு என்ற 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூலமாக வழங்கினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com