கரூர் எம்.பி., ஜோதிமணி
கரூர் எம்.பி., ஜோதிமணி

போஸ்ட் மேன் வேலை தான் ஆளுநருக்கு அரசியல் சட்டம் வரையருத்துருக்கின்ற அதிகாரம்.... ஜோதி மணி அதிரடி....

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் நல பிரிவிற்கு திருச்சி பெல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.42.50 மதிப்பில் அதி நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரூர் எம்.பி., ஜோதிமணி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்கள் அத்துமீறல்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

ஒரு சில இடங்களில் தான் இது போன்ற தவறுகள் நடக்கிறது பெற்றோர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் கவுன்சிலிங் மையம் அமைத்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிட வேண்டும். இதில் தமிழக பள்ளிக் கல்வித் துறை சிறப்பாக செயல்படுகிறது என்றார்.

ஆளுநரின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,ஆளுநருக்கு வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரம் உள்ளது.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் சட்டமன்ற பிரதிநிதிகள். அப்படி  சட்டமன்றம்  நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை முதல்வர் சொல்வதுபோல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கின்ற போஸ்ட்மேன் வேலைதான் ஆளுநருக்கு அரசியல் சட்டம் வகுத்து இருக்கின்ற அதிகாரம்.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் சட்டமன்ற பிரதிநிதிகள். அப்படி  சட்டமன்றம்  நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை முதல்வர் சொல்வதுபோல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கின்ற போஸ்ட்மேன் வேலைதான் ஆளுநருக்கு அரசியல் சட்டம் வகுத்து இருக்கின்ற அதிகாரம்.

ஆனால் ஆளுநர் அந்த அதிகாரத்தை மீதி தமிழக பாஜக தலைவர் போல் செயல்பட்டு மாநில உரிமை பறிக்கின்ற செயலை செய்கின்றார். துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை ஆளுனர் ஏன் கூட்ட வேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com