கோவை வெள்ளலூர் பேருராட்சி மறைமுக தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மருதாசலம், துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கணேசன் ஆகிய அதிமுக வார்டு உறுப்பினர்கள் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
பொய் வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு எற்ற மறைமுக தேர்தலுக்கு சென்றபோது திமுகவினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
துணைத் தலைவருக்கான தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என தெரிந்த திமுகவினர் வாக்குப்பெட்டியை தூக்கிவீசியதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம்காட்டி மறைமுக தேர்தலை தள்ளிவைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கோவை வெள்ளலூர் பேருராட்சி மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் எனவும், போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.