அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க வேண்டும் என்பதற்காக தான் ‘நான் முதல்வன்’ திட்டம்

அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க வேண்டும் என்பதற்காக தான் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க வேண்டும் என்பதற்காக தான் ‘நான் முதல்வன்’ திட்டம்

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இறுதியாண்டு மாணவர்களுக்கு பட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கையில் பட்டத்துடனும், கண்களில் கனவுகளுடனும் எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கிற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். மேலும் மாணவர்களின் அடுத்தடுத்த உயர்வுக்கு பட்டம் என்பது ஒரு அடித்தளம் தான் என குறிப்பிட்ட அவர், படிப்பானது இறுதி வரை தொடர வேண்டும் எனவும், மாணவர்கள் திறமையானவர்கள் வரிசையில் இடம்பெற வேண்டும் எனவும் வாழ்த்தினார். தொடர்ந்து நான் முதல்வன் திட்டம் பற்றி பேசிய அவர், மாணவர்களின் திறமை, தகுதிக்கேற்ற எதிர்காலம் நிச்சயம் அமையும் என நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டார்.

. ஏழை- எளிய விளிம்பு நிலையில் வாழும் மாணவர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தும் நான் முதல்வன் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com