பொதுத் தேர்வை புகாரின்றி நடத்த வேண்டும்... தேர்வு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!!

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை எந்தவித புகாருமின்றி நடத்தி முடிக்க வேண்டும் என தேர்வு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
பொதுத் தேர்வை புகாரின்றி நடத்த வேண்டும்... தேர்வு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!!

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மே 5 தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. சென்னையில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தலா 177 மைங்களிலும், 10ம் வகுப்புகளுக்கு 227 மையங்களிலும் தேர்வு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் சென்னை சேத்துப்பட்டில் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்குநரும் சென்னை மாவட்ட பொறுப்பு அலுவலருமான சேதுராம்வர்மா, மேற்பார்வையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், வினாத்தாள் கட்டு காப்பாளர், வழித்தட அலுவலர் என தேர்வு பணியில் ஈடுபடும் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், எந்தவித புகாருக்கும் இடமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என தேர்வு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தவறு ஏற்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com