சிவசங்கர் பாபா மீது பதிவான 2வது போக்சோ வழக்கில் தயாரானது குற்றப்பத்திரிக்கை

சிவசங்கர் பாபா மீது பதிவான 2வது போக்சோ வழக்கில் தயாரானது குற்றப்பத்திரிக்கை

சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். சிவசங்கர் பாபாவிற்கு சொந்தமான கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை டெல்லியில் வைத்து கைது செய்தனர். இதன் பின்னராக அவர் மீது 7 போக்சோ வழக்குகள் ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டது.

இதில் முதல் வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் ஆகிய இரு நீதிமன்றங்களையும் அனுகி அவருக்கு எதிராக உள்ள எட்டு வழக்குகளிலும் ஜாமீன் பெற்றார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக சிபிசிஐடி போலீசாரால் பதியப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சிவசங்கர் பாபா நேரடியாக விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீது இரண்டாவதாக பதியப்பட்ட போக்சோ வழக்கில், வீடியோ கால் மூலமாக மாணவிகளை ஆபாசமாக அழைத்ததாக பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தயார் செய்துள்ளனர்.

ஏற்கனவே சிவசங்கர் பாபா மீது எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர். 4 முன்னாள் மாணவிகளும் சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் என சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com