4 ஆம் அலை இன்னும் தொடங்க வில்லை...மக்கள் அச்சப்பட வேண்டாம்

தமிழக மக்கள் ஐ ஐ டி யில் உள்ளவர்களை முன்மாதிரியாக கொண்டு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

சென்னை கிண்டியில் உள்ள IIT வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 55 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் IIT வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தற்போது கொரொனா பாதிப்பு உலக அளவில் அச்சுறுத்தி வருகிறது.

அனைத்து அலைகளும் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ஒரு வார காலத்தில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

சென்னை ஐஐடியில் இதுவரையும் 2015 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 60 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது 2.98% ஆக தொற்று எண்ணிக்கை உள்ளது.

தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக இறப்பு இல்லை,மேலும் 100 க்கும் கீழ் பாதிப்பு உள்ளது. சென்னை ஐ ஐ டி யில் 19 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை கொரோணா அதிகரித்து வருகிறது என்ற அவர் 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து மாணவர்கள் ஐஐடி வந்து பயின்று வருகிறார்கள்.

14 விடுதிகளில் எந்த விடுதியில் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் அனைவருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

தொற்று ஏற்பட்ட 60 பேரில் கடந்த 4 நாட்களில் 40 பேருக்கு தொற்று இல்லாத நிலைஉள்ளது.தற்போது 20 பேருக்கு லேசான பாதிப்பு உள்ளது. மே 8 ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

கடந்த ஒரு வாரமாக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நான்காவது அலை தொடங்கி விட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 4 ஆம் அலை இன்னும் தொடங்க வில்லை ..மக்கள் அச்சப்பட தேவை இல்லை என்றார். நாளை காலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com