தஞ்சை மின் விபத்து விவகாரம்... முதல்வர் தலைமையில் குழு அமைப்பு!!

தஞ்சை மின் விபத்து தொடர்பாக கண்டறிய மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மின் விபத்து விவகாரம்... முதல்வர் தலைமையில் குழு அமைப்பு!!

தமிழக அரசு சார்பில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நீதிக் கட்சியை தோற்றுவித்த சர் பிட்டி தியாகராயர் மரியாதை செலுத்தும் வகையில் அவருடைய திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சாவூரில் இன்று அதிகாலை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பாக முதல்வர் அங்குள்ள அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க சொல்லி உள்ளார். முதல்வர் நேரில் சென்று பாதித்தவர்களை பார்க்க உள்ளார்.

மேலும் விபத்தில் மொத்தமாக 28 நபர்கள் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளனர் மின்சாரம் தாக்கியதில் 11 நபர்கள் இறந்த நிலையில் 17 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் ஒரு நபர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்களை கண்காணிக்க அந்த கல்லூரி முதல்வர் தலைமையில் பெரிய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தலைமையில் தொடர் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. கொரோனா மூன்றாம் அலையையும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் கடந்து வந்துள்ளோம்.

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நான்காம் அலை கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் தொடர்ந்து வரும் 8 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 2 கோடி பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பதால் அவர்கள் தங்கக்கூடிய இடத்திலேயே முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com