நேஷனல் அட்சிவ்மண்ட் சர்வே 2021 ஆம் ஆண்டிற்கான முடிவுகள் மே 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் 720 மாவட்டங்களில் உள்ள 1.18 லட்சம் பள்ளிகளில் 34 லட்சம் மாணவர்களை மதிப்பீடு செய்தது. இந்த ஆய்வு 3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் குழந்தைகளின் கற்றல் திறன்கள் பற்றிய விரிவான மதிப்பீட்டு ஆய்வை மூன்று வருட சுழற்சி காலத்துடன் நடத்துவதன் மூலம் நாட்டில் பள்ளிக் கல்வி முறையின் ஆரோக்கியத்தை மதிப்பிடுகிறது.
இது பள்ளிக் கல்வி முறையின் ஒட்டுமொத்த மதிப்பீட்டைப் பிரதிபலிக்கிறது. இந்த ஆய்வுக்கான தேர்வுகள் தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் 4,145 பள்ளிகளில் நடைபெற்றது.1,26,253 மாணவர்களும்,19001 ஆசிரியர்களும் பங்கேற்றனர். இதற்கான தேர்வுகள் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற காரணத்தினால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்கவில்லை.
இந்த ஆய்வின் முடிவுகள் படி தமிழகம்தேசிய சராசரியை விட, தமிழகத்தில் பயிலும் 3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் செயல்திறன் குறைவாக இருப்பதாக தேசிய சாதனை கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தை தவிர்த்து 3,5,8 மற்றும் 10 ஆம் வகுப்புகளை சேர்ந்த அனைத்து பாடப்பிரிவுகளும் தேசிய சராசரியை விட தமிழக மாணவர்களின் சராசரி குறைவாக உள்ளது. இதையடுத்து தமிழக அரசு என் கவனம் செலுத்தி முக்கியத்துவம் கொடுத்து கற்றல் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.