போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்… தாம்பரம் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை!!

போதைப் பொருள் விற்பனை செய்ததாக கடந்த மூன்று மாதங்களில் 67 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார்.
போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்…  தாம்பரம் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை!!

தாம்பரம் சேலையூர் தனியார் பள்ளியில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி மாணவர்கள் இடையே உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவ மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்தாலும் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்ள கூடாது. தைரியமாக இருக்க வேண்டும்.

பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதைப் பொருள் இருப்பதை குழுக்கள் அமைத்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 15 நாட்களில் அதிக அளவில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து உள்ளோம். தாம்பரம் ஆனையர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படும்.

அது மட்டுமில்லாமல் சாக்லேட் வடிவில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வந்தன. அதனை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் குட்கா போதை பொருட்களின் விற்பனை தடுக்கும் வகையில் சிறப்பு அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது

கடந்த மூன்று மாதங்களில் இது வரை 67 ரவுடிகளின் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பழுதான சிசிடிவி கேமரா அனைத்தும் புதுப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com