சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அறுவருக்கதக்க கருத்துகளை மறுபதிவிடுவதே நடிகர் எஸ்.வி. சேகரின் வாடிக்கை என்று ஆதாரத்துடன் புகாதாரர் தரப்பில் தெரிவிக்கபட்டதையடுத்து எஸ்.வி.சேகர் மீது சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.
தமிழக ஆளுராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக, சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் நடிகர் எஸ்.வி. சேகர் சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்ட பதிவுகளை அவர் மறுபதிவு (Re Tweet) செய்துள்ளதாகவும், அதனை நீக்கியுள்ளதற்காக பதிவுகளை நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.
சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்து கொண்டு இது போன்ற செயலை செய்வது ஏற்று கொள்ள முடியாது எனவும் வழக்கு தொடர்பாக எஸ்.வி.சேகர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளி வைத்து உத்தரவிட்டது.