தொடங்கியது மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்... ஜூன் 1ல் வேட்புமனு பரிசீலனை!!

 தொடங்கியது மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்... ஜூன் 1ல் வேட்புமனு பரிசீலனை!!

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் ஜூன்.29ம் தேதி முடிவடைகிறது. குறிப்பாக தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது

. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ரமேஷ் ஆகியோரிடம் வேட்புமனுக்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அறையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பொது விடுமுறை நாளான 28 ஆம் தேதி, மற்றும் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களை தவிர்த்து, வரும் 31ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு பரிசீலனை ஜூன் 1ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3ம் தேதி ஆகும். காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தால் இந்தத் தேர்தலில் போட்டி இருக்காது. கூடுதலாக மனுத்தாக்கல் செய்யப்பட்டால், ஜூன் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com