சென்னை விமான நிலையத்தில் இயற்கை காற்று வரும் வகையில் ஸ்கைலைட் சிஸ்டம்

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,400 ரூபாய் செலவில் உள்நாடு மற்றும் பன்னாட்டு முணையங்களை இணைத்து ஒருங்கிணைந்த அதிநவீன புதிய விமான முனையங்கள் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

சுமார் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் புதிய முனையங்கள் பணி கடந்த 2021ம் ஆண்டில் முடிந்து பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்ப ஊரடங்கு, நிலங்கள் கையகப்படுத்துவதில் தாமதம், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் ஓர் ஆண்டில் கையாளப்படும் பயணியர்களின் எண்ணிக்கை தற்போது 1.7 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் 3.5 கோடியாக அதிகரிக்கும். அதற்கு தகுந்தாற்போல் புதிய முணையங்களில் கூடுதல் அதிநவீன இயற்கை சூழல் கொண்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றது.

தரை தளத்தில் பன்னாட்டு வருகை பயணிகளுக்கான வழக்கான நடைமுறைகளும் 2வது தளத்தில் பயணிகள் புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

புதிய அதிநவீன முணையத்தில் 5 தளங்கள் உள்ளன. பயணிகள் ஓய்வு அறைகள், விவிஐபிகள் தங்கும் அறைகள், ஷாப்பிங் மால்கள் உட்பட பல்வேறு கூடுதல் வசதிகள் புதிய முனையத்தில் உள்ளன.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் முதல் முதலாக, ‘ஸ்கைலைட் சிஸ்டம்’ எனும் முனையத்திற்குள் அதிகளவு சூரிய ஒளி வெளிச்சம் வருவதற்கான பிரத்யேக வடிவமைப்புகள் அமைக்கப்படுகின்றன.

6 மீட்டர் வட்ட வடிவில் 10 க்கும் மேற்பட்ட ஸ்கைலைட் சிஸ்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சூரிய வெளிச்சம் நேரடியாக விமான நிலைய உள்பகுதிக்கு வருவது போல் அமைக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் சூரிய வெளிச்சம் மட்டுமே உள்ளே வரும். வெப்பத்துடன் கூடிய புற ஊதாக் கதிர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் திறனும் இதில் உள்ளது. அந்த சிஸ்டத்திற்கு மேலும், கீழுமாக 2 பகுதிகளிலும் சிறப்பு கண்ணாடிகள் அமைக்கப்படுகின்றன.

அவைகள் சூரிய ஒளியை பில்டா் செய்து வெளிச்சத்தை மட்டும் உள்ளே அனுப்பும். வெப்பத்தை தடுத்து நிறுத்தும்.அவ்வாறு அமைக்கப்படும் பெரும்பாலான ஸ்கைலைட் சிஸ்டம் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இதனால் புதிய அதிநவீன முணையங்கள் நல்ல வெளிச்சத்துடன காற்றோட்ட வசதியாகவும் இருக்கும். அதே நேரத்தில் மின்சார செலவும் கணிசமான அளவு குறைய வாய்ப்பு உள்ளது. புதிய அதிநவீன ஒருங்கிணைந்த விமான முனையங்களின் பணிகளில் சுமாா் 80 சதவீதம் முடிக்கப்பட்டு வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2023 தொடக்கத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com