கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பு... மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு!!

கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பு... மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு!!

சென்னை கொரட்டூர் ஏரியில் 20 முதல் 25 கிலோ எடை கொண்ட மீன்கள் ஏரியில் நச்சு கலந்த மாசடைந்த நீரால் இறந்து மிதப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி மண்டலம் 7க்கு உட்பட்ட கொரட்டூர் ஏரியானது சுமார் 590 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த கொரட்டூர் ஏரி முழுவதும் கழிவுநீர், நச்சு கலந்த நீர் தேங்கியுள்ளதால் ஏரியில் மேல் மட்டம் முழுவதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக மீன்களுக்கு முறையான ஆக்ஸிஜன் இல்லாமல் மீன்கள் உயிரிழக்க தொடங்கியுள்ளன. மேலும் இந்த நச்சு கலந்த நீரில் வளர்ந்து உள்ள மீன்களை இங்கு உள்ள சமூக விரோதிகள் இரவு நேரங்களில் பிடித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் இதனால் அவர்களுக்கு கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து உடனடியாக நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதேபோல் ஏரியை தூர்வார வேண்டும் எனவும் நச்சு கலந்த நீரை வெளியேற்றி கொரட்டூர் ஏரியை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
vnews27
www.vnews27.com