சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அண்மையில் பள்ளி பேருந்து மோதியதில், அதே பள்ளியில் படித்த இரண்டாம் வகுப்பு மாணவன் தீக்க்ஷித் உயிரிழந்தார். இந்த விவகாரம் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், அதிரடி விசாரணை மேற்கொண்டு, பள்ளி நிர்வாகத்தின் மெத்தனம் காரணமாகவே விபத்து நடந்திருக்கிறது என்று, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதையடுத்து பள்ளி நிர்வாகம், பள்ளியின் முதல்வர் மற்றும் போக்குவரத்து குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளியின் முதல்வர் தனலட்சுமி மற்றும் போக்குவரத்து குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் இரண்டு பேர் என மூன்று பேரை பணிநீக்கம் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.