சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும். கட்டண உயர்வு என புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினமே அரசாணை பிறப்பிக்கப்படும். நீட் தேர்விற்கு பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் வரும் 17 ஆம் தேதி நடைபெறும். ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கு செல்போனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் படித்த பள்ளிகளிலேயே கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
அதேபோல், பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.