. பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் சேவை , வின்ச் போன்றவை இயக்கப்பட்டு வருகிறது. மலையடிவாரத்திலிருந்து வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் மலை மீது சென்று சாமி தரிசனம் செய்து வர வசதியாக கோயில் நிர்வாகம் ரோப்கார் மற்றும் வின்ச் சேவையை இயக்கி வருகிறது.
ரோப் காரில் பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதிசெய்யும் வகையில் கோயில் நிர்வாகம் மாதம் ஒரு நாள் ரோப் கார் சேவையை நிறுத்தி முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது.
அந்த வடையில், நாளை ரோப்காரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. இதன் காரணமாக ரோப்கார் சேவை நாளை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும் பக்தர்கள் வின்ச் சேவை மற்றும் படிபாதையை பயன்படுத்தி மலைமீது சென்றுவரவும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.